பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து யாழ் நகரின் காட்சி!
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
குறிப்பாக இராணுவம் மற்றும் காவல்துறையினரால் பிரதான வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகள் நீங்கப்பட்டிருந்தாலும் அந்த இடங்களில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் பேருந்துகளின் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்களும் வழமைக்கு திரும்பியுள்ளன.
கருத்துகள் இல்லை