• Breaking News

    நட்ட ஈடும் வேண்டாம் மரணசான்றிதழும் வேண்டாம் எங்கள் குழந்தைகளை ஒப்படை- அடைமழையிலும் உறவுகளின் கதறல்!

     சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? எனக் கேட்டு சர்வதேச சிறுவர் தினமான இன்றைய தினம்  முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மழைக்கு மத்தியிலும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

    கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1669 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.  இந்நிலையில் இன்று சர்வதேச சிறுவர் தினத்தில் இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? எனக் கோரி நீதி கேட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

    இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எமது குழந்தைகளுக்கு உயிர் வாழும் உரிமை இல்லையா? சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?, உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமா?, தமிழ் குழந்தைகள் பயங்கரவாதிகளா?, ஓமந்தையில் இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே?, உறவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

    எமது உறவுகளை எங்களிடம் தா, சர்வதேசமே பதில் சொல், சின்னஞ்சிறார்களும் பயங்கரவாதிகளா?, நட்ட ஈடும் வேண்டாம் மரண சான்றிதழும் வேண்டாம் , பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?, விடுதலை செய் விடுதலை செய் எமது உறவுகளை விடுதலை செய், omp வேண்டாம் உள்ளக விசாரணை வேண்டாம், கடத்தாதே கடத்தாதே காலத்தை கடத்தாதே, உள்ளக பொறிமுறை சர்வதேசத்துக்கான கண்துடைப்பே, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டும், போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad