• Breaking News

    உக்ரைன் - ராஷ்யா யுத்த நிறுத்தத்திற்கான கதவு திறக்கப்படும்? இன்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தை

     


    உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் தமது நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தை நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கான கதவை திறக்கும் என துருக்கி அதிபர் தையீப் ஏர்துவான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    உக்ரைன் மீது ரஷ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை துருக்கியில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

    ரஷ்ய மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் இன்று துருக்கியில் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் பேச்சுக்களில் திருப்புமுனையான முடிவுகளை எட்ட முடியும் என தையீப் ஏர்துவான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    எனினும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவுடனான இந்தப் பேச்சுக்கள் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பே உள்ளதாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.

    இந்தப் பேச்சுக்களை பிரசாரக் கண்ணோட்டத்தில் அல்லாமல், “நல்ல நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என” உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

    உக்ரைன் படையிடம் சிக்கிய பெருமளவு ரஷ்ய இராணுவத்தினர்!

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad