• Breaking News

    அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை அசைக்க முடியாதாம் - அமைச்சர் தினேஷ் கொக்கரிப்பு!


     அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை அசைக்க முடியாது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

    அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை இல்லாமல் செய்வதாக வெளியிடப்படும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை குறைப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது எனவும், வினைத்திறனாக செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ரணிலிடம் அரசாங்கம் ஒருபோதும் கோரியதில்லைல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் பிரதமர் பதவியை வகித்துள்ள அனுபவம் மிக்கவர் எனவும் அவரது கருத்துக்களுக்கு செவி சாய்க்கப்பட்டாலும் பதவி வழங்கப்படாது என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

    நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு நபர்கள் மீது குற்றம் சுமத்துவதனை விடவும், இயற்கை மீதே குற்றம் சுமத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கோவிட் காரணமாக ஒட்டுமொத்த உலகமே நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad