• Breaking News

    யாழில் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இளைஞரின் சடலம் மீட்பு!

     


    யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல  தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    யாழ்ப்பாண நகரை சேர்ந்த 6 பேர் குறித்த தனியார் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1 மணியின்  பின்னர் நீச்சல் தடாகத்தில்  நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது .

    இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் இளைஞன் ஒருவர் நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதப்பதை அவதானித்து குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் உயிரிழந்தவருடன் மேலும் பலர் நீராடி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கை இறப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad