ஒருநாள் முதல்தர அணியின் சவால்கள் அல்லது சாதனைகள் நாளை ஆரம்பம்
ஒருநாள் போட்டிகளில் இந்தியா முதல் தர அணியாக சற்று அதிக நாட்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பலமான தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா நாளை முதல் ஒருநாள் போட்டியை விளையாடவுள்ளது. நாளைய ஆட்டம் பகலிரவு ஆட்டமாகும். மாலை 5 மணிக்கு போட்டி துவங்குகிறது.பாகிஸ்தான் கடைசியாக தென் ஆப்பிரிக்காவை ஒருநாள் தொடரில் வென்று வரலாறு படைத்தது. அவர்கள் தென் ஆப்பிரிக்க அணியில் ஏற்படுத்திய சேதங்களை இந்தியா தொடர்சியாக செய்யவேண்டியது அவசியம். பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியால் தென் ஆப்பிரிக்கா மனம் துவண்டுள்ளது. இந்த மனச்சிறயிலிருந்து அவர்களை தப்பவிடக்கூடாது. எனவே ஆக்ரோஷமாக இந்தியா விளையாடவேண்டும்.
No comments