போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....
போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதற்கான பயிற்சி பெறுகிறார். அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்த நயன்தாரா அப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படத்துக்கு பிறகு சாஃப்டான வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் ஜெயம் ரவியுடன் புதிய படத்தில் நடிக்கிறார். ராஜா இயக்குகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்கிறார். இதற்காக உடலை ஸ்லிம் தோற்றத்துக்கு மாற்றுவதுடன் சண்டை காட்சிகளில் நடிப்பதற்காக பயிற்சி பெறுகிறார்.
இதற்கான போலீஸ் டிரெயினிங்கை சிறப்பு பயிற்சியாளர் மூலம் பெறுகிறார். நயன்தாரா வேடம் பற்றி இயக்குனர் ராஜாவிடம் கேட்டபோது, என்னுடைய படங்களில் ஹீரோயின்களுக்கு எப்போதுமே வலுவான வேடமாக இருக்கும். இப்படத்திலும் அதுபோல் ஒரு வலுவான கதாபாத்திரத்தில்தான் நயன்தாரா நடிக்க உள்ளார். ஏற்கும் கதாபாத்திரத்துக்கு அவர் எப்போதும் பொருத்தமான நடிப்பை வெளியிடுவார்.
அதை இந்த படத்திலும எதிர்பார்க்கலாம்‘ என்றார். போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா என்றதற்கு வேடம் பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்று மறுத்துவிட்டார் ராஜா. இந்த படத்துக்காக ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரயில் செட் போடப்பட்டுள்ளது. இந்த ரயிலில் படமாக்க வேண்டிய காட்சிகளை ராஜா இயக்கி வருகிறார்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை