முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...
ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தில் விஜய் தாதாவாக நடிக்கிறாராம்.
கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாக விஜய் ராபின் ஹூட்டாக வருகிறாராம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்கிறார்கள்.
அனிருத் இசையமைப்பில் பாடல்கள் மதன்கார்க்கி எழுதுகிறார். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஏற்கெனவே விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. துப்பாக்கி படத்தை மும்பை பின்னணியில் சொன்ன முருகதாஸ் இந்தப் படத்தை கொல்கத்தா பின்னணியில் சொல்லப் போகிறாராம்.
இதற்காக படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை