இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா...
சென்னை: இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா. சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் -23) இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு இடங்களில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி இளையராஜா ஓய்வெடுத்தார். இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் வீடு திரும்பினார். மலேசியாவில் இன்று மாலை நடக்கும் கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக இருந்தது. உடல்நிலை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை. ஆனால் வீடியோ கான்பரென்சிங் முறையில் திரையில் தோன்று ரசிகர்களுடன் பேசுகிறார் ராஜா. சில வாரங்கள் கழித்து நேரில் சென்று மலேசிய மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை