• Breaking News

    ஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்

    உண்மைகளை அடிப்படையாக கொண்டு வெளியான ஜனாதிபதி பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள் இங்கே
    தொகுக்கப்பட்டுள்ளன. இதில் சில உண்மைகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிபெற்றுள்ளன.


    1. Air Force One


    1997 வெளியான இந்தப்படத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford) நடித்துள்ளார். தீவிரவாதிகள் Air Force One என்ற விமானத்தைக் கடத்தும் போது ஜனாதிபதியை பணயக்கைதியாகப் பிடிக்கின்றனர். அவர், அவர்களிடமிருந்து தப்பித்துப்போகிறார். ஆனால் உண்மையில் தப்பித்தது போன்று நடித்து விமானத்தினுள்ளேயே ஒளிந்திருந்து அவர்களுடன் போராடுகிறார்.


    2. JFK



    ஆலிவர் ஸ்டோனால் (Oliver Stone) இயக்கப்பட்ட இப்படம் 1991 இல் வெளியானது. இது ஜனாதிபதி ஜான். எஃப்.கென்னடி (John F. Kennedy) படுகொலை சதியைப் பற்றிய படமாகும். முன்னாள் மாவட்ட வழக்கறிஞராக கெவின் காஸ்ட்னர் (Kevin Costner) நடித்துள்ளார். இந்த திரைப்படம் இரண்டு அகாடமி விருதுகளை வென்றது.

    3. Frost/Nixon



    இது 1977 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உண்மையான தொலைக்காட்சி நேர்முக உரையாடல்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. பத்திரிகையாளர் டேவிட் ஃப்ரோஸ்ட் (David Frost) மற்றும் ஜனாதிபதி ரிச்சர்ட்  நிக்சன் (Richard Nixon) இடையே நடைபெறும் தொலைக்காட்சி பேட்டி பற்றிய கதையே இப்படத்தின் கருவாகும். பிராங்க் லங்கலா (Frank Langella) அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனாக மிக அருமையாக நடித்திருந்தார். 2008 இல் வெளிவந்த இப்படத்தை ரான் ஹோவர்ட் ( Ron Howard) இயக்கினார்.

    4. W



    இது ஜார்ஜ் டபிள்யூ புஷ் (George W. Bush.) இன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. 2008 வெளிவந்த இப்படத்தில் புஷ்ஷாக ஜோஷ் ப்ரோலின் (Josh Brolin) நடித்திருந்தார். இப்படமும் இயக்குநர் ஆலிவர் ஸ்டோனால் (Oliver Stone) இயக்கப்பட்டது.

    5. In the Line of Fire



    1993 இல் வெளியான திரில்லர் படம். ஜனாதிபதியை படுகொலை செய்யத் திட்டமிடும் முன்னாள் CIA முகவரை கண்டுகொள்ளும் இரகசிய சேவை ஏஜெண்ட்டைப் பற்றிய கதைக்கரு. கிளின்ட் ஈஸ்ட்வுட் ( Clint Eastwood) இரகசிய சேவை ஏஜெண்ட்டாகவும் ஜோன் மால்கோவிச் (John Malkovich ) CIA முகவராகவும் நடித்திருந்தனர். ஈஸ்ட்வுட்டின் கதாபாத்திரம் 1963 இல் ஜனாதிபதி ஜான்.எஃப்.கென்னடியின் படுகொலை நேரத்தில் இருந்த விபரங்களைக் கொண்டுள்ளது.

    6. Vantage Point



    இது 2008 இல் வெளியான அமெரிக்க அரசியல் திரில்லர் படமாகும். இப்படத்தின் கதை, அமெரிக்க ஜனாதிபதி மீது மேற்கொள்ளப்படும் கொலை முயற்சியை வெவ்வேறு கதாபாத்திரங்கள் பார்வை மூலம், வித்தியாசமான வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறது.

    7. The American President

     

    1995 இல் வெளிவந்த இப்படத்தில், மனைவியை இழந்த அமெரிக்க அதிபருக்கு கவர்ச்சிகரமான சுற்றுச்சூழல் அதிகாரியான கதாநாயகியுடன் காதல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் குற்றக் கட்டுப்பாடு சட்டம் இயற்றுவதற்கு அதிபர் முயற்சிக்கிறார். ’The West Wing’ என்ற தொலைக்காட்சி நாடகத்தின் ஈர்ப்பினால் இப்படம் உருவானது. மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas) அதிபராக நடித்திருந்தார்.

    8. Welcome to Mooseport



    2004 வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை திரைப்படம் இது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக ஜெனி ஹாக்மேன் (Gene Hackman ) நடித்த இப்படமே அவரது இறுதிப் படமாகும். புதிய இங்கிலாந்து நகரத்தின் மேயர் பதவிக்குப் போட்டியிடும் ஹாக்மேனுக்கு எதிராக உள்ளூர் வாசியான ரே ரோமனோ (Ray Romano) பிரச்சாரம் செய்யும் நகைச்சுவை கதையைக் கொண்டது.

    9. Primary Colors



    ஜனாதிபதி பில் கிளின்டனை அடிப்படையாக வைத்து 1998 இல் வெளியான நகைச்சுவை திரைப்படம். ஜான் டிராவோல்டா (John Travolta) ஜனாதிபதியாக நடித்திருந்தார். அவரது நடிப்பால் கவரப்பட்ட கிளின்டன் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருந்தார்.

    10. Man of the Year

    ஒரு நகைச்சுவையான அரசியல் உரையாடல் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள நாயகன் ராபின் வில்லியம்ஸ் (Robin Williams), அவரது பார்வையாளர்களின் கோரிக்கையின் பேரில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார். இப்படம் 2006 இல் வெளியானது.
     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad