20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோடியைத் தாண்டி ஓட்டம்...
20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோடியைத் தாண்டி விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த படம் பாண்டியநாடு. லட்சுமிமேனன், விக்ராந்த், பாரதிராஜா, சூரி நடித்திருந்தார்கள். சுசீந்திரன் டைரக்ட் செய்திருந்தார். மதி ஒளிப்பதிவு செய்திருந்தார். இமான் இசை அமைத்திருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 2ந் தேதி வெளியான படம் 50 நாளை நிறைவு செய்திருக்கிறது. வெளியூர்களில் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் படம் தங்கியிருக்க செகண்ட் ஷிப்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் சத்யம், எஸ்கேப், உதயம், மாயாஜால் வளாகங்களுக்கு சென்றால் பாண்டிய நாட்டை பார்க்கலாம். 8 வருடங்களுக்கு பிறகு விஷால் சுவைத்திருக்கும் வெற்றி இது.
சுமார் 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோடியைத் தாண்டி வசூலித்திருக்கிறது. விஷாலை விட படத்தை வாங்கி விநியோகித்த வேந்தர் மூவீசுக்கு கணிசமான லாபத்தைக் கொடுத்திருக்கிறது. அற்புதமான திரைக்கதையும், இமானின் இசையுமே படத்தின் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை