Header Ads

ad728
  • Breaking News

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    67 வயதான கிலானி ஊழல் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜரான பிறகு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில், “இம்ரான் அரசுக்கும், பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் கழகத்திற்கும் (NAB) நன்றி. நீங்கள் வெற்றிகரமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுஎன்று பதிவிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728