யோகா செய்து அசத்தும் சமந்தா
நடிகை சமந்தா யோகாசனம் செய்வதில் கைதேர்ந்தவர் என்பது தெரிந்த சங்கதிதான்.
எனினும் அண்மைக்காலமாக இவர் வெளியிடம் யோகாசனப் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
ரசிகர்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. .
இரு தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், அவர்
கைகளைத் தரையில் ஊன்றி அந்தரத்தில் பறப்பது போன்ற யோகாசன முத்திரையுடன் இருப்பதைக் காணமுடிகிறது. இதுவும்
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தாம் இந்தளவு யோகா செய்ய தனது கணவரின் ஒத்துழைப்பு காரணம் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா. யோகாவுக்கு
அடுத்தபடியாக தோட்டத்து வேலைகளை செய்வதுதான் அவருக்குப் பிடித்தமானதாம்.
“தோட்டப் பராமரிப்பு வேலைகளை மனதார ரசித்துச் செய்வேன். அதே
போன்றதுதான் யோகாவும். நானும்
எனது கணவரும் தினமும் ஒன்றாகத்தான் யோகா செய்கிறோம். மேலும்
பல கடினமான யோகா அசைவுகளை கற்கும்படி அவர்தான் என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். அதனால்தான்
இதுபோன்ற படங்களை என்னால் வெளியிட முடிகிறது,” என்று
சொல்லும் சமந்தா தற்போது விஜய் சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல
ரெண்டு காதல்’ படத்தில்
நடித்து வருகிறார்.
இப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிறது.
கருத்துகள் இல்லை