இங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து
இங்கிலாந்து பிரதமர் பொரீஸ் ஜான்சன் கார் விபத்தில் காயமின்றி தப்பினார். இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பராளுமன்றக் கூட்டதில் நேற்று பங்கேற்ற பின் பொரீஸ் ஜான்சன்அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் பிரதமரின் காரை நோக்கி ஓடினார். அவரை தடுக்கும் முயற்சியில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களில் வந்தவர்கள் முயற்சித்தனர்.
அப்போது பாதுகாப்பு வாகனம் ஒன்று பிரதமரின் கார் மீது மோதியது. எனினும் பிரதமரின் காருக்கு எதுவும் நேரவில்லை. பிரதமரும் காயமின்றி தப்பினார். ஆர்ப்பாட்டக்காரரை பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை