• Breaking News

    ட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனாதிபதி

    எண்ணெய் வளமிக்க தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அந்த நாட்டின்  ஜனாதிபதி  நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வலுத்து வருகின்றன. வெனிசுலாவின்  பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்து கொண்டுள்ளார். 

    தனது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என   ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் இந்த விவகாரத்தில் அவர்  அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

    இந்த நிலையில் அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த  ட்ரம்ப், நிக்கோலஸ் மதுரோ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது குறித்து மட்டுமே அவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என கூறினார். இந்த நிலையில் தேவையேற்பட்டால் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதே சமயம் அந்தப் பேச்சுவார்த்தை மரியாதைக்குரியதாக இருக்கவேண்டும் எனவும் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad