• Breaking News

    இலங்கை, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!


    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 14 நாட்டின் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்துள்ளது.

    விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மையமாக திகழ்கிறது.

    இந்த நிலையில், கடந்த 19ஆம் திகதியிலிருந்து ஜூன் 27 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 14 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

    இந்நிலையிலேயே மீண்டும், தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் அவசரநிலை மேலாண்மை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, லைபீரியா, நமிபியா, சியாரா லியோன், காங்கோ, உகாண்டா ஜாம்பியா, வியட்நாம், வங்காளதேசம், நேபாளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து விமான சேவைக்கும் தடையை நீட்டித்துள்ளது.

    எனினும், சரக்கு விமானம், தொழில், வாடகை விமானம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad