கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், தலையில் துப்பாக்கிச் சூட்டுடன் சடலம் மீட்பு!
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில் மிதந்து வந்த சடலம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தின் இரண்டு கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்ததுடன், தலையில் இரண்டு துப்பாக்கி சன்னங்கள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் அண்மையில் ஒரு நபர் சங்கிலியால் பிடிக்கபட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில், ஒரு குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட நபரின் சடலமாக இது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை