மகேஷ்பாபு,சமந்தா ரசிகர்களிடயே மோதல்
தெலுங்கு சினிமாவில் அனுஷ்கா,தமன்னா, அஞ்சலி உள்பட பல கவர்ச்சிப்புயல்கள் களத்தில் நின்றபோதும், சமந்தாவை யாராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனை முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், மிதமான கிளாமரை வெளிப்படுத்தி மட்டுமே நடித்து வரும் சமந்தாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்களாம்.
இந்நிலையில், அவர் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது கட்அவுட்கள் வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம் சமந்தாவின் விசுவாசத்திற்குரிய ரசிகர்கள். அங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக சமந்தாவுக்கும் ராட்சத கட்அவுட்களை தியேட்டர்கள் மட்டுமின்றி, நகரத்தின் முக்கிய சாலைகளிலும் வைக்கிறார்களாம்.
அப்படி சமீபத்தில் ஆந்திராவிலுள்ள ஒரு முக்கிய ஏரியாவில் மகேஷ்பாபுவின் கட்அவுட் வைக்கயிருந்த இடத்தில் சமந்தாவின் கட்அவுட்டை அவரது ரசிரக்கள் வைத்து விட்டார்களாம். இதனால், இரண்டுதரப்பு ரசிகர்களும் கட்டிப்புடி சண்டையில் உருண்டார்களாம். அதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்ததோடு, அந்த பகுதியில் எந்த சினிமா நடிகர்-நடிகைகளின் கட்அவுட்களையும் வைக்கக்கூடாது என்றும் ஆர்டர் போட்டு விட்டார்களாம்.
Get in Touch With Us to Know More

கருத்துகள் இல்லை