கலாபவன் மணியா , கலகக்கார மணியா ?
கலாபவன் மணி கலகம்செய் மணி என்று விரைவில் பெயரெடுத்துவிடுவார்.அவரைச் சொல்லி குற்றமில்லை. நம்மைச் சற்றியிருக்கும் அதிகாரம் அப்படி. சமீபத்தில்தான் தனது காரை சோதனைப் போட்ட வனத்துறை அதிகாரிகளுடன் கலகம் புரிந்தார் கலாபவன் மணி.இப்போது கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம். வெளிநாடு சுற்றுப் பயணம் முடித்து கொச்சி வந்திறங்கிய கலாபவன் மணியிடம் அவரது கையில் கிடந்த தடித்த கைச்சங்கிலி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டனர். வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்கள் குறிப்பிட்ட அளவு தங்கம்தான் எடுத்து வரலாம் என்பது சட்டம்.
கைச்சங்கிலி நான் வெளிநாடு சென்ற போதே என்னுடைய கையில் கிடந்தது என்று பதிலளித்தார் கலாபவன் மணி. அதிகாரிகள் விடுவதாக இல்லை. கேள்விகள்... விசாரணை என்று தங்களின் வேலையில் இறங்க, கடுப்பான மணி கைச்சங்கிலியை விட்டெறிந்து இடத்தை காலி செய்தார். கைச்சங்கிலி குறித்து கலாபவன் மணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சுங்க இலாக பொறுப்பாக அறிவித்திருக்கிறது. சரி, யார் மீது தவறு? மணி உணர்ச்சிவசப்படுகிறவர். நடிகன் என்பதற்காக கூடுதல் சலுகை எதிர்பார்த்திருக்கலாம். சுங்கத்துறை அதிகாரிகளும் சாமானியர்கள் அல்ல. மது பாட்டிலில் இருந்து தங்கம்வரை சந்தர்ப்பம் வாய்த்தால் உருவிக் கொள்கிறவர்கள். சில நேரம் வலுக்கட்டாயமாக சிரமப்படுதியிருக்கலாம்.இப்படியே போனால் கலகம்செய் மணி நிரந்தரப் பெயராகிவிடும் மணி அண்ணே.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை