மம்முட்டி படத்தில் நடனமாடும் விஜய்
ஆஷிக் அபு இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகும் படம் தி கேங்ஸ்டர். இதில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு மார்கழி மாசம் வருகிற 15 ந்தேதி தொடங்குகிறது.இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த படத்தில் இயக்குனர் ஆஷிக் மிகுந்த ஆர்வத்துடன் விஜயை அறிமுகபடுத்துகிறார். இது குறித்து விஜய்யிடம் பேசப்பட்டதாகவும் அவரும் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் பிரபு தேவா இயக்கி அக்ஷய் குமார் நடித்த ரவுடி ரத்தோர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் அந்த பாடல் பாலிவுட்ட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மலையாளப் படத்திலும் விஜய் நடனமாட முடிவு எடுத்து உள்ளார். தி கேங்ஸ்டர் படத்தில் மம்முட்டி மிகப்பெரிய கடத்தல் தாதாவாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் நடிகர் பார்த்தீபன், சுராஜ் வெஞ்சரமூடி, பாபுராஜ், மீராஜாஸ்மின்,ரீமா கல்லிங்கல்,ஆகியோரும் நடிக்கிறார்கள். விஜய் தற்போது மலையாள சூப்ப ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இந்தபடம் பொங்கலுக்கு வெளிவருகிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை