• Breaking News

    1,100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் வியட்நாமில் கண்டுபிடிப்பு


    வியாட்நாமின் குவாங் நாம் என்ற இடத்தில் 1,100 ஆண்டுகள் பழமையான ஒற்றைக்கல்லாலான சிவலிங்கத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
    வியாட்நாமின் குவாங் நாம் பகுதியில் ஏராளமான சிவலாயங்கள் உள்ளன. ஆனால் 1969ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் இங்கிருக்கும் கோவில்களில் பெரும்பலான பகுதிகள் சிதைந்து போன நிலையில் காணப்படுகின்றன.
    2011ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை சார்பில் குவாங் நாம் பகுதியில் உள்ள சிவலாயங்களில் மறுசீரமைப்பு பணி துவங்கியது. கோவில்களின் மறுசீரமைப்பிற்காக இந்தியா உதவுவது ஒரு கலாச்சார பரிமாற்றத்திற்கான எடுத்துக்காட்டு என்று கூறப்பட்டது.
    கடந்த வாரம் நடைபெற்ற மறுசீரமைப்புப் பணியின்போது 1,100 ஆண்டுகள் பழமையான ஒற்றைக்கல்லால் வடிவமைக்கப்பட் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
    அதில் இந்தியா மற்றும் வியாட்நாம் இடையே உள்ள நாகரிகத் தொடர்பை இந்த கண்டுபிடிப்பு மீண்டும் உறுதி செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad