வூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை? - ட்ரம்ப் மீண்டும்
வூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லவில்லை, அது எப்படி நடந்தது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகான் நகரில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்து. சில வாரங்களில் பிற நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறினார்.
வூஹான் மருந்து ஆய்வு மையத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவியதாக அவர் குற்றம் சாட்டினார். தவிர கரோனா வைரஸ் பரவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அமெரிக்க குழுவை வூகானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க சீனா மறுத்தது.
கரோனா தொடர்பாக எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்றும், உரிய நேரத்தில் அனைத்து தகவல்களையும் முறையாக வழங்கி வந்தகாவும் சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சீனா மீது ட்ரம்ப் மீண்டும் அதிரடி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதாவது:
கரோனா உலக நாடுகளுக்கு சீனா வழங்கிய பரிசு. இது நல்ல பரிசல்ல. அவர்கள் நினைத்து இருந்தால் கரோனா உலகம் முழுவதும் பரவாமல் தடுத்து இருக்க முடியும். இதனை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் மிக மோசமான பரிசை உலகிற்கு சீனா வழங்கி விட்டது. வூகானில் உருவான அந்த வைரஸ் மிக மோசமான பிரச்சினைகளை உருவாக்கியது. ஆனால் அது சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லவில்லை. அது எப்படி நடந்தது. இதை தான் உலகம் கேட்கிறது.
இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை