வியக்க வைத்த கல்யாணம்
மாப்பிள்ளை
3 அடி உயரம்.. கல்யாண பொண்ணும் 3 அடி உயரம்.. இருவரும் வேளாங்கண்ணி கோயிலில் கல்யாணம்
செய்து கொண்டனர். இதில் மாப்பிள்ளை அஜித் தீவிர ரசிகராம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர்
ஏழுமலை.. கொளப்பாடு கிராமத்தை சேர்ந்த சுகன்யா.. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது..
மணமக்கள் 2 பேருமே 3 அடி உயரம் உள்ளவர்கள்.
வேளாங்கண்ணி
ஆர்ச்சில் உள்ள மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் எளிய முறையில் இந்த கல்யாணம் நடைபெற்றது..
50க்கும் குறைவான உறவினர்கள் இந்த கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.. மாப்பிள்ளையும்,
பொண்ணும் மாஸ்க் அணிந்திருந்தனர்.. கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவருமே சமூக இடைவெளியை
கடைப்பிடித்தவாறே மணமக்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். இந்த 3 அடி உயர தம்பதியின் திருமணம்
இணையத்தில் வைரலாகியும் வருகிறது.. இதில் மாப்பிள்ளை ஏழுமலை தீவிரமான அஜித் ரசிகராம்..
அதனால் ஏராளமான அஜித் ரசிகர்கள் இந்த கல்யாண வீடியோவை ஷேர் செய்து, மணமக்களுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்து வருகின்றனர்..
கருத்துகள் இல்லை