• Breaking News

    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஜேர்மனி அல்லது போர்த்துகலில் நடைபெறும்


    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளையும் போட்டிகளையும் நிறுத்திவைத்துள்ளது.இந்த் நிலையில் துருக்கியின் இஸ்தான்புல்லிலிருந்து நடத்தப்பட இருந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து (சி.எல்) இறுதிப் போட்டி ஜேர்மனி அல்லது போத்துகலில் நடைபெறலாம் என கூறப்படுகிறதுசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை   கடந்த சனிக்கிழமை இஸ்தான்புல்லில் உள்ள அடாடூர்க் ஒலிம்பிக் மைதானத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

    ஐரோப்பிய உதைபந்தாட்ட சங்கங்களின் ஒன்றிய நிர்வாகக் குழு ஜூன் 17 அன்று கூட உள்ளது. ஆகஸ்ட் இறுதிப் போட்டிக்கான புதிய இடத்தையும், காலிறுதி, அரையிறுதி நடைபெறும் நாட்டையும் தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.
     வழக்கமாக, நடுநிலை இடத்தில் இறுதி போட்டி நடத்தப்படும்கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாட்டை ஆதரிக்கும் திட்டத்தை மாற்ற ஐரோப்பிய உதைபந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

    மீதமுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கான  வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அணுகக்கூடிய இடமா இருக்கும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad