வெளிநாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சீனா திட்டம்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு விமான போக்குவரத்தை தொடங்க மீண்டும் அனுமதிக்கப்படுவதாகவும், அமெரிக்க விமானங்களுக்கு உண்மையான தடையை நீக்குவதாகவும் சீனா இன்று அறிவித்துள்ளது.
உலகின் இரு வல்லரசுகளுக்கிடையில் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுநோய், ஹாங்காங் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இந்த தொடர்ச்சியான பிரச்சினைகளால் சீனாவிடம் இருந்து விலகுவதற்கான வெளிப்படையான முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன, சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹவாய் மீதும் அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அமெரிக்க நிதிச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களின்
நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அமெரிக்கா ஜூன் 16 முதல் சீன பயணிகள் விமானங்களுக்கு
தடை விதிப்பதாக கூறியது.
இந்த நிலையில் மார்ச் 12 அட்டவணையில் பட்டியலிடப்படாத
அனைத்து வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இப்போது ஒவ்வொரு வாரமும் சீனாவிற்கு ஒரு சர்வதேச வழியை இயக்க முடியும் என்று சீனாவிமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
கருத்துகள் இல்லை