• Breaking News

    கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன்


    சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.-வான ஜெ.அன்பழகன், தி.மு. முன்னணி நிர்வாகிகளில் ஒருவர். அக்கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த அவர், கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.

    வயிற்றுவலி காரணமாக குரோம்பேட்டையிலுள்ல ரெலா மருத்துவமனையில் கடண்டஹ் 2 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கொரோனா அறிகுறிகள் இருக்கவே, அதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே கல்லீரல் பாதிப்புக்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டவர் அன்பழகன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், மூச்சுவிட தொடர்ந்து சிரமப்பட்டதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். திடீரென அவர் உடல்நிலை மோசமடைந்ததால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜனில் 80 சதவிகிதம் வென்டிலேட்டர் மூலமே அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்தநிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சைப் பலனின்றி அவர் காலை 8.05 மணியளவில் உயிரிழந்ததாக ரேலா மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
    இன்று 62-வது பிறந்தநாள் காணும் அன்பழகன், பிறந்தநாளன்றே இயற்கை எய்தியிருக்கிறார். அவரது மறைவு தி.மு.கவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad