விக்ரமையும் மகனையும் இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்
நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் 60 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, அனிருத் இசை அமைக்க உள்ளார். ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இருக்கும் மாற்றகலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை