காயத்துக்கு மீண்டும் சத்திரசிகிச்சை போட்டிகளில் இருந்து பெடரர் விலகல்
சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரரும், உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான ரோஜர் பெடரருக்கு கடந்த பெப்ரவரி மாதம் வலது கால்முட்டி காயத்துக்கு சிறிய அளவில் சத்திரசிகிச்சை நடந்தது. இந்த நிலையில் மறுபடியும் அதே முட்டியில் பிரச்சினை ஏற்பட்டதால் இரண்டாவது முறையாக ஓரிரு வாரங்களுக்கு முன்பு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து புத்துணர்ச்சியுடன் களம் திரும்ப முடிவு எடுத்துள்ள பெடரர் இந்த சீசனில் எஞ்சிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு சீசனை எதிர்நோக்கி இருப்பதாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான 38 வயதான பெடரர், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட போட்டிகளை தவற விடுகிறார்.
கருத்துகள் இல்லை