உரிமைப்போரில் வெற்றி பெற்ற தீபா,தீபக்
இரும்புக்
கோட்டையான வேதா இல்லம் போயஸ் கார்டனின் அடையாளங்களில் ஒன்று. ஜெயலலிதா எனும் ஆளுமை
வசித்ததால் சிறப்பு அந்தஸ்த்து பெற்றது வேதா இல்லம். ஜெயலலிதாவின் தாயார் அந்த
வீட்டை வாங்கும்போது அது இவ்வளவு பிரபல்யமாகும்
என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி
வகித்தபோது தமிழக அரசின் முக்கிய
முடிவுகளைத் தீர்மானிக்கும் இடமாக விளங்கியது. ஜெயலலிதா இறந்த பின்னர் வேதா
இல்லமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உடன் பிறவா சகோதரி சசிகலாவின்
கைகளுக்குச் சென்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத்தண்டனை
வழங்கப்பட்டதால் அவை இரண்டும் கைநழுவிப்போயின.
சசிகலாவின்
சிறைத்தண்டனை காலம் முடிவுற்று அவர் வெளியில்
வந்தால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனைக் கைப்பற்ற முயற்சிப்பார் என்ற அச்சம் எடப்பாடி
பழனிச்சாமிக்கும், பன்னீர்ச்செல்வத்துக்கும் இருக்கிறது. அதனால் ஜெயலலிதாவின்
நினைவு இல்லமாக போயஸ் கார்டனை மாற்றுவதற்கு அவசரச்சட்டம் உருவாக்கியது தமிழக அரசு.
எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தின் தலைமையில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்ச்செல்வம் உட்பட அமைச்சர்கள் சிலர் அங்கத்தவர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஜெயலலிதா
வாழந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு
எதிர்ப்புத் தெரிவித்து ஜெயலலிதாவின் சகோதரனின் மகள் தீபாவும், மகன் தீபக்கும் வழக்குத்தாக்கல்
செய்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 27 ஆம் திகதி வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின்
வீட்டை முதல்வரின் தனி அலுவலகமாக மாற்ற யோசிக்கலாம் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம். ஜெயலலிதாவின்
இரண்டாம் நிலை வாரிசுகளாக அவரின் அண்ணனின்
பிள்ளைகளான தீபாவையும், தீபக்கையும் நியமிப்பதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு
பேரிடியாக அமைந்துள்ளது. ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக ஆடிய சதுரங்க வேட்டைக்கு
நீதிமன்றம் தடை போட்டுள்ளது.
ஜெயலலிதாவின்
தாயார் சந்தியா, 1967 ஆம் ஆண்டு வேதா இல்லம் அமைந்துள்ள நிலத்தை 1.32 இலட்சம் ரூபாய்க்கு வாங்கினார். அதன் இப்போதைய பெறுமதி சுமார்
43.96 கோடி ஆகும். போயஸ் தோட்ட சொத்தை ஜெயலலிதாவின்
பெயரிலும், திநகரில் உள்ள சொத்தை மகன் ஜெயக்குமார் பெயரிலும் வாங்கினார். ஜெயலலிதா
திருமணம் செய்துகொள்ளவில்லை சகோதரரின் பிள்ளைகள் என்பதால் வாரிசுரிமை சட்டத்தின் படி
தீபாவும் தீபக்கும் இரண்டாம் நிலை வாரிசுகளாகையால் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க
அவர்களுக்கு உரிமை உள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு பேரிடியாக
உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துகு
எதிரான வழக்குகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு
இந்த வழக்கின் தீர்ப்பு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா
மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டுக்குப் போகக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அதனை நினைவிடமாக
மாற்ற முயற்சித்தார்கள். ஜெயலலிதா திருமணம் செய்யவில்லை. ஆகையால், அவரது சொத்தைக் கையகப்படுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த புகழேந்தி,ஜானகிராமன்
என்னும் இருவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதால்
மேல்முறையீடு செய்தனர். இவர்கள் இருவௌம் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழ்கத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களை இயக்கும்
பெரும் தலைகள் யாரெனத் தெரியவில்லை
ஜெயலலிதாவுக்குச் சொத்தை அனுபவிப்பதற்காக
உறவினரல்லாவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் அவரின் மருமக்களாகிய தீபாவும், தீபக்கும்
தமது உரிமையை நிலைநாட்ட நீதிமன்றக் கதவைத்
தட்டினார்கள். தீபாவும், தீபக்கும் இரண்டாம் நிலை வாரிசுகள் ஆகையால் ஜெயலலிதாவின் சொத்தை
அனுபவிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நினைவிடம் அமைத்து
தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதால் மக்களின் வரிப்பணம் விரயமாகும் எனவும் நீதிமன்றம்
குட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்ப்பு எடப்பாடிக்கு சறுக்கலாக உள்ளது. தீர்ப்பை எதிர்த்து
மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது.
வேதா இலம் தவிர சசி என்ரர் பிறைஸ்,கொடநாடு எஸ்டேட்,
ஹதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்டம் ஏராளமான சொத்துக்களில் ஜெயலலிதாவுக்கு 50 சதவீத
பங்குகள் உள்ளன. இவை தவிர தங்கம்,வைரம், கார், வங்கிவைப்பு என்பனவவும் உள்ளன. 2016
ஆம் ஆண்டு இவற்றை மதிப்பிட்டபோது 913 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டது. கடந்த 2007 ஆம்
ஆண்டு முதல் போயஸ்தோட்ட சொத்து, அண்ணாசாலை பர்சன் மேனரில் உள்ள வீடு, சென். மேரிஸ்
சாலையில் உள்ள வீடு, ஐதராபாத்தில் உள்ள வீடு என்பன முடக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது
இதேவேளை, வருமனவரி மற்றும் செல்வவரி பாக்கியாக 1674 கோடி ரூபாவை ஜெயலலிதா செலுத்த வேண்டியுள்ளது.
தீபாவும் தீபக்கும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசு என தீர்ப்பளித்த நீதிமன்றம்
தற்போது தீர்ப்பில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. ஜெயலலிதாவுக்குத் திருமணம் ஆகாததால்
அண்ணனின் மகள், மகன் ஆகியோரை நேரடிவாரிசாக அறிவித்து தீர்ப்பில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.
ஜெயலலிதாவின் மருமகளாகிய தீபா வேதா இல்லத்தில்
பிறந்து வளர்ந்தவர். பின்னர் ஏதோ ஒரு காரணத்துக்காக ஜெயலலிதா அவரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்ப்பதற்காகச் சென்ற
தீபாவை, சசிகலா அனுமதிக்கவில்லை அப்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்த தீபா ஜெயலலிதாவின் மறைவுக்குப் அரசியலில் இறங்கப்போவதாக அதிரடி காட்டிவிட்டு அமைதியானார். அவரின் சகோதரரான தீபக், சசிகலாவின்
பக்கம் நின்று தீபாவுக்கு எதிராக அரிக்கை விடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து ஜெயலலிதாவின்
சொத்தை பாதுகாப்பர்களா அல்லது கரைப்பார்களா எனத் தெரியாது. தீபக் மீண்டும் சசிகலாவின்
பக்கம் போனால் பாகப்பிரிவினை ஏற்படும்.
கருத்துகள் இல்லை