இலங்கைக்கு வருகிறது இந்திய கிறிக்கெற் அணி
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்,ரி20
போட்டிகளில் விளையாட இந்திய கிறிக்கெற் சபை சம்மதம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில், நீண்ட இடைவேளைக்கு பிறகு, இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிக்கெற் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும்,
இந்த தொடருக்கு இதுவரையில் இலங்கை அரசு எந்திவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தொடருக்கான அனுமதி கிடைத்தவுடன், இருநாட்டு கிறிக்கெற் தொடருக்கான வேலைகளை இலங்கை கிரிக்கெட் போர்டு மேற்கொள்ள இருக்கிறது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, குறிப்பிட்ட ரசிகர்களை மட்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை ரி20 தொடரையும் நடத்த இலங்கை தயாராகி வருகிறது.
கருத்துகள் இல்லை