• Breaking News

    22 ஆண்டுகளாக இளைஞரின் வயிற்றுக்குள் இருந்த கட்டி


    சிறுவயதில் இருந்தே வயிறு வலியால் துடித்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் 13 கிலோ எடைகொண்ட கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் சிறுவயதில் இருந்தே வயிற்றுவலியால் அவதிப்படுவந்த நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
    இதனை அடுத்து 10 மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்று அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளது. அப்போது அந்த இளைஞரின் வயிற்றில் இருந்த மிகப்பெரிய கட்டி ஒன்றை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 13 எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
    இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், 22 ஆண்டுகளுக்கு பிறகு கட்டி அகற்றப்பட்டுள்ளது.அவரது வயிற்றில் இந்த ஒரே ஒரு கட்டி மட்டுமே இருந்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய கட்டி என்று கூறியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad