• Breaking News

    சிறுநீர் பையில் சிக்கிய செல்போன் சாஜர் வயர்


    இரண்டு அடி நீள செல்போன் சார்ஜ் போடும் வயரை நபர் ஒருவர் ஆணுறுப்பு வழியாக உள்ளே செலுத்தியதால் அந்த வயர் சிறுநீர் பைக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு வயிற்று வலி இருப்பதாகவும், செல்போன் சார்ஜ் போடும் வயரை வாய் வழியாக விழுங்கிவிட்டதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் குறிப்பிட்ட நபரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் எந்த ஒரு அசாதாரண பொருளும் இல்லை.
    இதனை அடுத்து எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அந்த நபரின் சிறுநீர் பையில் வயர் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒயர் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
    மேலும் இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், அந்த நபர் செல்போன் சார்ஜரை வாய் வழியாக விழுங்கி இருந்தால் அது நிச்சயம் வயிற்றில் தான் இருந்திருக்கும், ஆனால், அந்த நபர் தங்களின் உண்மையை மறைத்துவிட்டார். அவர் அந்த ஒயரை ஆணுறுப்பு வழியாக உள்ளே செலுத்தியுள்ளார். அதனால்தான் ஒயர் சிறுநீர் பைக்குள் சென்றுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad