• Breaking News

    காஷ்மீர் மாணவர்களுக்கு பாகிஸ்தான் உதவுவதற்கு இந்திய பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை


    காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 1,600 மாணவர்களின் தொழில் கல்விக்கு பாகிஸ்தான்  அரசு உதவித் தொகை அளிக்க முன் வந்துள்ளது. ஆனால்  பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருக்கும்  காஷ்மீர் பகுதியில் 150 பேர் பொறியியல் , மருத்துவம் உள்ளிட்ட கல்வி பயிலலாம் என்று பொலிஸார் மதிப்பீடு செய்துள்ளனர்.
    இந்நிலையில்  பாகிஸ்தான் பாராளுமன்றத்தில்  அந்நாட்டு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகை திட்டத்தை சுட்டிக்காட்டி  காஷ்மீர் இளைஞர்கள் இடையே பயங்கரவாதத்தை பரப்பும் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி இது எனவும் பாகிஸ்தானின்  மீது அனுதாபம் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் என்றும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
    ஏற்கனவே  வாகா, அட்டாரி வழியாக கல்வி கற்க பாகிஸ்தானுக்குச் சென்ற மாணவர்கள்   எல்லை வழியாக பயங்கரவாதிகளாக திரும்பி வந்ததை பாதுகாப்பு அமைப்புகள் உதாரணமாக காட்டியுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad