• Breaking News

    கோட்டா உத்தரவிட்டிருந்தால் ஐநூறு, ஆயிரம் தலை உருண்டிருக்குமாம் - கூறுகிறார் மஹிந்தானந்த!

     


    இலங்கை வரலாற்றில் கோட்டாபய போன்ற அதிபர் ஒருவர் கிடைத்ததில்லை என்றும், அவ்வாறான ஒருவர் பதவி விலகியமை தொடர்பில் என்றாவது ஒருநாள் மக்கள் சிந்திப்பார்கள் எனவும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


    அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியமை தொடர்பில் எப்போதாவது மக்கள் சிந்திப்பர். அவர் பதவி விலகுவதற்கு காரணமானவர்களும் அதனை சிந்திப்பர். எமது வரலாற்றில் இவ்வாறான ஜனாதிபதி ஒருவர் கிடைத்ததில்லை.


    அன்று அதிபர் மாளிகையை கைப்பற்றும் போது, முப்படையினரும் அவருடனேயே இருந்தனர்.


    அப்போது அவர் உத்தரவிட்டிருக்கலாம். அவ்வாறு அவர் அதனை செய்திருந்தால் அன்று போராட்டத்திற்கு வந்திருந்தவர்களில் குறைந்தது ஐநூறு, ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad