• Breaking News

    பாகிஸ்தானில் விமான விபத்து 107 பேர் பலி


    பாகிஸ்தானில் லூகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் இன்று புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சி   நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதாதால் அதில் பயனம் எய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
    லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் 320 என்ற விமானம் கராச்சி நகருக்குப் புறப்பட்டது

    விமாம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே சென்றபோது , உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க ஒரு நிமிடம் இருந்தபோது, மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியுருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. விபத்து தொடர்பாக மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், பொலிஸார் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

    கரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் விபத்து நடந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad