• Breaking News

    எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை துல்லியமாக அளவீடு செய்யும் சீனா


       
     உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை ஆறு முறை அளவிட்டு இருமுறை உயரத்தையும் வெளியிட்டது சீனா. சீனாவின் கணக்கீட்டின்படி  எவரெஸ்ட் சிகரம்  1975ல்  8,848.13 மீற்றராகவும்  2005ல் 8,844.43 மீற்றராகவும் இருந்தது. அந்நாடு இறுதியாக கணக்கிட்ட உயர அளவு  நேபாள நாடு எடுத்திருந்த அளவைவிட  4 மீற்றர் குறைவாக இருந்தது. இதனால்  சிகரத்தின் உயரத்தை மீண்டும் துல்லியமாக அளவீடு செய்ய  சீனாவின் சர்வே குழுவினர்  மே  1ல் முடிவு செய்தனர்.
    இதையடுத்து  அக்குழுவினர்  திபெத் வழியாக புறப்பட்டு சென்று  நேற்று  முந்தினம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். 'எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவீடு செய்வது  இயற்கையை பற்றிய மனித அறிவை மேம்படுத்துவதோடு  விஞ்ஞான வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என  விஞ்ஞானிகள் நம்புகின்றனர்' என அந்நாட்டு அரசின்  'சின்ஹுவா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad