• Breaking News

    ஸ்பெய்னில் முக கவசம் அணிவது கட்டாயம்


    கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஸ்பெய்ன்  மூறாவது இடத்தில் உள்ளது .
    ஸ்பெயினில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இப்போது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. எனவே கடந்த சில நாட்களாக வீட்டிற்குள் முடங்கியிருந்த மக்கள் வெளியே நடமாடத் துவங்கி உள்ளனர்

    இதனை தொடர்ந்து  இன்று முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மேலும அதிகரிப்பதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு, 6 வயது முதல் அனைத்து வயது மக்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் வலியுறுத்தி உள்ளது.

    சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாத பொது இடங்களில் முக கவசம் அவசியமாகிறது. மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad