• Breaking News

    தலைவன் இருக்கிறான்


    '
    தேவர் மகன்' படத்தில் சாதிதான் மையமாக இருந்தது. ஆனால், 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் அரசியல்தான் 'மையமாக' இருக்கும் என்கிறார்கள்.

    'இந்தியன் - 2' நீண்டுகொண்டேபோவதால், 'தலைவன் இருக்கின்றான்' புராஜெக்ட்டை கையில் எடுத்துவிட்டார் கமல்ஹாசன். இந்தப் படம் சொந்தத் தயாரிப்பு என்பதால் லாக்டெளன் நாள்களில் நடிகர்களை ஒப்பந்தம் செய்துமுடிக்கும் பணிகள் மிகமிக வேகமாக நடந்துவருகிறது.

    'தலைவன் இருக்கின்றான்' பட வேலைகளை ஆரம்பித்ததும், கமல் முதலில்  ஒப்பந்தம் செய்தது .ஆர்.ரஹ்மானைத்தான். இசையைப் பொறுத்தவரை ரஹ்மான் கிட்டத்தட்ட தன்னுடைய பாடல் பதிவுகளை முடித்துவிட்டார். ரஹ்மானுக்கு அடுத்தபடியாக கமல் ஒப்பந்தம் செய்தது வடிவேலுவை. அடுத்து, மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார் கமல்.  

     . 'தேவர் மகன் -2'தான் 'தலைவன் இருக்கின்றான்' படம் என்கிறார்கள்.   1992-ல் வெளிவந்து  மிகப்பெரிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'தேவர் மகன்' படத்தின் பார்ட் 2 தான் 'தலைவன் இருக்கின்றான்.' 'தேவர் மகன்' படத்தில் சாதிதான் மையமாக இருந்தது. ஆனால், 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் அரசியல்தான் 'மய்யமாக' இருக்கும் என்கிறார்கள். 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் வடிவேலு உடனான நகைச்சுவை காட்சிகளில், அரசியல் பகடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் வகையில் வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறதாம். ரஹ்மான் நீண்ட நாள்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணி கொண்ட கதைக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
    தேவர் மகனில் நடித்த ஒல்லி வடிவேலு, 'தலைவன் இருக்கின்றான்' படத்திலும் அதே இசக்கியாக நடிக்க இருக்கிறார். பங்காளி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தன் அப்பாவைக் கொன்றுவிட்டு ஜெயிலில் இருந்து திரும்பும் கமல்ஹாசனுடன் அரசியல் வில்லனாக விஜய் சேதுபதி மோத இருக்கிறார் என்கிறார்கள்.

     . இந்தப் படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள். கமல்ஹாசனின் மனைவியாக ரேவதியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.    பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad