• Breaking News

    தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்கள மக்களும் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அபாயம்!

     தமது சொந்தநலனுக்காக ஒருசில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால் மக்கள் வீதியில் இறங்கிபோராட வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

    வவுனியா புதியசின்னப்புதுக்குளம் பகுதியில் செயற்பட்டுவரும் கற்குவாரியால் அந்தப்பகுதி மக்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக இன்றைய தினம் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

    தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

    குறித்த பகுதியில் உள்ள கற்குவாரியால் கிராம மக்கள் பல்வேறு உளவியல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பிவாழ்கின்றனர். எனவே இந்த மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் விதத்தில் இந்த கற்குவாரி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

    மக்கள் நலன்சார்ந்து துறைசார்ந்த அதிகாரிகள் செயற்படாமையே இதற்கு முக்கியகாரணம். தங்களுடைய சொந்த நலனுக்காக ஒருசில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால் மக்கள் வீதியில் இறங்கிபோராட வேண்டிய சூழல் இருக்கிறது.

    அப்படியான ஜனநாயக போராட்டங்களை கூட கொவிட் தடுப்புசட்டங்களை காட்டி அரசாங்கம் ஒடுக்கி வருகின்றது. குறித்த காணிக்கான உரிமையாளர் உரிமைபத்திரத்தையும் வைத்திருக்கும் நிலையிலும் குறித்த காணி கற்குவாரிக்காக வழங்கப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மிகவும் பாதிக்கின்றது.

    இதனை நிறுத்துவதற்கு அரசும் துறைசார் அதிகாரிகளும் முழுமையாக செயற்ப்படவேண்டும். அத்துடன் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள பசில் ராஜபக்ச கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முதல் தற்போதுவரை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் செயற்பட்டிருந்தார். அவருடைய நிர்வாகத்திலேயே அரசின் சகல செயற்பாடுகளும் இடம்பெற்றிருந்தது.

    அவர் தற்போது நிதி அமைச்சராக பதவி ஏற்பதால் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கமுடியும் என்று நான் நம்பவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்தவேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி முதல் அரசாங்கத்தை சார்ந்தவர்கள் தமது சுயநல அரசியலை கைவிடவேண்டும், பணம் உழைப்பதைவிடுத்து மக்கள் நலன்சார்ந்து சிந்தித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்.

    2020 ஆம் ஆண்டு யூன் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் மிகப்பெரிய பணத்தினை பெற்றதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கிறன. அவர் மீதே இப்படி குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது அவரது பிள்ளைகள் மருமக்கள், உறவினர்கள் அமைச்சர்களாக இருக்கும் போது நாட்டை முன்னேற்றமுடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

    அரசில் தனிப்பட்டவர்களின் செயற்பாடு காரணமாக தமிழ் மக்கள்மாத்திரமல்ல சிங்களமக்களும் பட்டிணிசாவை எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad