யாழ். மாவடியில் சௌபாக்கியா கிராமத்தின் அங்குரார்ப்பண வைபவம்
இன்று (2021.07.15) சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவடிப் பகுதியில் சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் வறுமை ஒழிப்பு செயற்றிட்டமானது, நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த உற்பத்தி கிராமத்தில் ஏற்கனவே பால் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் அந்த உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபா அங்கஜன் இராமநாதனால் வழங்கி வைக்கப்பட்டைள்ளது.
அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந் நிகழ்வில் சங்கானை பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர், அப் பிரிவு கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், குறித்த பால்ச்சங்க பொது முகாமையாளர், கால்நடை வைத்தியர், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-----------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை