• Breaking News

    இன்றைய ராசிப்பலன் - 25/03/2022



    மேஷ ராசி அன்பர்களே!

    பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். விற்பனை யும் அதிகரிக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

    அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.


    ரிஷப ராசி அன்பர்களே!

    புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.

    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

    மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.


    மிதுன ராசி அன்பர்களே!

    எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். கடன் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

    மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக் கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

    புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.


    கடக ராசி அன்பர்களே!

    உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியா கும். நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணி யாளர்களால் வீண் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப் பார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

    புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

    பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.


    சிம்ம ராசி அன்பர்களே!

    முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இன்று விநாயகர் வழிபாடு நன்று.

    மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

    பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

    உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.


    கன்னி ராசி அன்பர்களே!

    தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மகா விஷ்ணு வழிபடுவது நலம் சேர்க்கும்.

    உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.

    அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

    துலா ராசி அன்பர்களே!

    காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித் துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும். தக்க முன்னெச்ச ரிக்கை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்ப டும். இன்று சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் குறையும்.

    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

    சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

    விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

    விருச்சிக ராசி அன்பர்களே!

    சகோதர வகையில் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனு கூலமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஷண்முகக்கடவுள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

    விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது

    அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

    கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.


    தனுசு ராசி அன்பர்களே!

    குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியா பாரிகளால் அனுகூலம் உண்டாகும். இன்று மகாலட்சுமியை வழிபடுவது மிகச் சிறப்பு.

    மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

    பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

    உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.


    மகர ராசி அன்பர்களே!

    தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச் சியே உண்டாகும். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் அதிகரிக்கும். அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

    உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

    திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

    கும்ப ராசி அன்பர்களே!

    இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடிவதுடன், அத னால் எதிர்பார்த்த ஆதாயமும் கூடுதலாகக் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நன்று.

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

    சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

    பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

    மீன ராசி அன்பர்களே!

    காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டா லும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாப மும் அதிகரிக்கும். இன்று காலபைரவரை வழிபடுவது நன்று.

    பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

    ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
    -------------------------------------------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad