• Breaking News

    மகளிரின் கைத்தொழிற் பொருட்கண்காட்சி சங்கரத்தையில்

     


    மகளிரால் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தொழிற் பொருட்களின் கண்காட்சியானது இன்றைய தினம் (11) சங்கரத்தை இரத்தினசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

    கிராமி தொழில் திணைக்களத்திற்கு கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகத்தாலும் மகளிருக்கான தொழிற்பயிற்சி வழங்கப்படுகின்றது 

    அந்தவகையில் சங்கானை பிரதேச செயலகத்தினாலும் மகளிருக்கு தையல், சிகையலங்காரம், அழகுக்கலை, ஐசிங் போன்ற ஒரு வருடகால பயிற்சி நெறிகள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு வழங்கப்பட்ட ஒரு வருடகால பயிற்சி நிறைவுற்ற நிலையில் இன்றையதினம்,  மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

    சங்கானை பிரதேச செயலகத்தின் தையல் போதனா ஆசிரியர் திருமதி வேல்வரராணி நல்லகுமார் அவர்களால் பயிற்றப்பட்ட மாணவர்களது கைத்தொழிற் பொருட்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டன.

    தையல் போதனா ஆசிரியர் திருமதி வேல்வரராணி நல்லகுமார் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

    இந்த பயிற்சிநெறிகளை முடித்துவிட்டு தொழிற்துறைக்குள் செல்லும் மாணவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

    ஏனெனில் அந்த தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்குரிய நிதி வளமோ அல்லது ஏனைய வளங்களோ அவர்களுக்கு சரியாக அமைவதில்லை. இதனால் அவர்கள் கற்றுக்கொண்ட இந்த பயிற்சி நெறியானது பிரயோசனமற்று போகின்றது.

    எனவே அவர்கள் குறித்த தொழிற்துறைக்குள் செல்வதற்கு நிதி வளம் அல்லது வேறு வளங்களை வழங்குபவர்கள் முன்வந்து அவற்றை வழங்கினாலேயே பெற்றுக்கொண்ட இந்த பயிற்சியின் உச்ச பெறுபேற்றை பெறலாம்.

    அத்துடன் பயிற்சிநெறியில் பங்குகொள்ளும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு நாளொன்றிற்கு இருநூறு ரூபா ஊக்கிவிப்பு கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.

    எனவே ஆர்வம் உள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ள பயிற்சி நெறிகளில் உங்களையும் ஈடுபடுத்திக் கொண்டு பயனைப் பெறலாம் என்றார்.











    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad