• Breaking News

    50 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான கார்ட்டூன் தொடர் நிறுத்தம்



    ஜப்பான் மக்களின் பேராதரவைப் பெற்று 50 வருடங்களாக ஒளிபரப்பாகும்   சாசே சான் எனும் கார்ட்டூன் தொடர் நிறுத்தபட உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

     சினிமா,
    இதர தயாரிப்பு பணிகளுக்கு ஜப்பானில் தடையிருப்பதால், சுமார் 50 ஆண்டுகளில் முதல்முறையாக வரும் ஞாயிற்றுகிழமையன்று ஜப்பானில் சாசே சானின் புதிய கதை ஒளிபரப்பாகாது என்று அந்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக பழைய கதை மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானில் 1969ஆம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாக சாசே சான் என்ற கார்ட்டூன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. மாச்சிகோ ஹசிகாவா என்ற பெண் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில், 1946-ம் ஆண்டு, ஷின்புன் என்ற சிறிய பத்திரிகையில் சித்திர கதையாக சாசே சான் வெளியானது.

     தொலைகாட்சி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சாசே சான் கார்ட்டூன் பரிமாண வளர்ச்சியடைந்து. சாசே என்ற பெண்ணை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது சாசே சான் கார்டூன். 1969ஆம் ஆண்டு முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது ஜப்பான் மக்கள் சாசே சானை தலையில் வைத்து கொண்டாடினர்.

    இந்த கார்டூனை பார்ப்பதற்காக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும், ஜப்பான் மக்கள் குடும்பம் குடும்பமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து சாசே சான் கார்டூனை கண்டு ரசிப்பார்கள்  2013ஆம் ஆண்டு, உலகிலேயே நீண்டநாள் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது சாசே சான்.
      

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad