58 நாட்களின்பின் பேசிய பெண்
இங்கிலாந்து நாட்டில் தெற்கு கடலோர நகரமான சவுதாம்ப்டன் பொது ஆஸ்பத்திரியில் 35 வயதான பெண், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை மோசமானதால் இவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு
வருகிறது. அதுவும் ஒரு நாள் இரு நாள் அல்ல, 58 நாட்களாக தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு
வருகிறது. அவர் இப்போது அபூர்வமாக குணம் அடைந்து வருகிறார். அவர் முதன்முதலாக பேசினார். அவருக்கு இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள மருத்துவ நிபுணர் டாக்டர் சஞ்சய் குப்தா சிகிச்சை அளித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை