• Breaking News

    ஆர்ஜென்ரீனாவுக்கு நிதி வழங்கிய மெஸ்ஸி


    தென்அமெரிக்கா
    நாடான ஆர்ஜென்ரீனாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்கும் வகையில்  உதைப்ந்தாட்ட வீரரான மெஸ்ஸி  5.4 லட்சம் டொலர்  நிதியுதவி வழங்கியுள்ளார்.

    ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட  அணியின் கப்டன் மெஸ்ஸி, ஸ்பெயினின் தலைசிறந்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது கொரோனாவால் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெஸ்சி ஏற்கனவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பண உதவி செய்துள்ளார். .

    பார்சிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70 சதவீதத்தை விட்டுக்கொடுக்க தயார் என்று கூறிய மெஸ்சி, கிளப்பின்  ஊழியர்களுக்கு  100 சதவீதம் சம்பள பெறுவதற்கு உறுதி அளிப்போம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad