• Breaking News

    விண்வெளியில் படமாக்கப்படும் முதல் திரைப்படம் – நாயகனாக டாம் குரூஸ்


    நாயகன் விண்வெளிக்குச் சென்று, பெரும் சாகசம் செய்து, உலகை காப்பாற்றுவதாக நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதெல்லாம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாயத்தால் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் நிஜமாகவே ஒரு திரைப்படம் விண்வெளியில் படமாக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.


    இத்தகவலை நாசா நிர்வாக பிரதிநிதி (NASA Administrator Representative) ஜிம் பிரிடென்ஸ்டைன் (Jim Bridenstine) உறுதிப்படுத்தினார். ஏஜென்சி விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுடன் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) இப்படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    அதிரடி நாயகன் டாம் குரூஸ் (Tom Cruise) இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். "சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS), டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்ற நாசா ஆர்வமாக உள்ளது" என்று பிரிடென்ஸ்டைன் ட்வீட் செய்துள்ளார்.

    நாசா மற்றும் தனியார் விண்வெளி உற்பத்தியாளரான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) இன் ஒத்துழைப்போடு இத்திட்டம் மேற்கொள்ளப்படும். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம், 2021 ஆம் ஆண்டில் வணிக விண்வெளி விமானத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்ன்ஸ்டைனின் அறிக்கை, இந்த திட்டத்தின் முதல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் ஆகும். நாசா இன்னும் எந்த கூடுதல் தகவலையும் வெளியிடவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad