போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை வீச்சு
போலந்து நாட்டில் கொரோனா வைரஸுக்கு 18 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கொரோனாவால் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பொருளாதார ஊக்கச்சலுகைகளை அறிவிக்கக்கோரி, தொழில்முனைவோர் உள்பட ஏராளமானோர் நேற்று முன் தினம் தலைநகர் வார்சாவில் போராட்டம் நடத்தினர்.
அதிக அளவில் கூடுவது சட்டவிரோதம் என்று கூறி, கலைந்து செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர். அதை மீறி, பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை பொலிஸார் வீசினர். தடியடியும் நடத்தினர்.
கருத்துகள் இல்லை