கோபக்கார டோனி
கிறிக்கெற்
உலகின் கப்டன்கூல் என செல்லமாக அழைக்கப்படுபவர் டோனி. கடினமான சூழ்நிலையிலும் நிதானம்
தவறாமல் திட்டமிடுவார் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். ஆனால், அவர் எப்பொழுதும் கூலாக
இருக்கமாட்டார் அவர் அமைதியை இழந்து கோபப்பட்ட தருணங்களும் உண்டு என ஸ்போர்ட்சின் கிறிக்கெற்
கனெக்டட் ஷோவுக்காக பேசிய சக வீரர் கெளதம்
கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய
அணியில், சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடும்போது யாராவது களத்தடுப்பில் தவறு செய்தால்
அல்லது கச்சைத் தவறவிட்டால் டோனி கடுமையாக கோபத்தை வெளிப்படுத்துவார். தன்னுடைய அமைர்ஹிய
எந்தத்தருணத்திலும் அவர் கைவிட்டதில்லை.டோனியும் மனிதந்தானே அவர் கோபப்பட்டால் என்னதவறு
எனக் கம்பீர் கேட்டார். டோனி கோபத்தில் பற்றைத்
தூக்கி எறிந்த சம்பவம் உண்டு என கிறிக்கெற்
வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை