• Breaking News

    விநோதமான ஆடைகளை அணிந்து, மனைவியின் அலுவலக ஆன்லைன் வீடியோவில் தோன்றும் கணவன்


    இந்த லாக்டவுன், பலரையும் வீட்டிலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்ய வைத்துள்ளது. இந்த மாற்றம் பலருக்கு மிகவும் சவாலானதாக இருக்கிறது. பலரைப் போலவே, இந்தியானாவைச் சேர்ந்த காரா ஃபீல்ட்ஸ்(Cara Fields) மற்றும் அவரது கணவர் மாட் (Matt) ஆகியோர் இந்த புதிய வேலை-வாழ்க்கை சமநிலையைக்கு தங்களை பழக்கப்படுத்தி வருகின்றனர்.





     இந்த கடினமான காலங்களில் தனக்கும் – தனது உடன் வேலைசெய்யும் சகாக்களுக்கும் – இலகுவான மனநிலையைல் கொடுப்பதற்காக, தனது கணவர் மாட் (Matt), புது உத்தியை கையாள்வதாக காரா தெரிவித்துள்ளார். காரா ஃபீல்ட்ஸின் அலுவலக ஜூம் (Zoom) ஆன்லைன் அழைப்புகளில் வேடிக்கையான ஆடைகளை அணிந்து தோன்றத்தொடங்கினார் மாட் (Matt).


    பொது இடங்களில் விளையாட்டாக காராவை சங்கடப்படுத்துவதை மாட் வழக்கமாக கொண்டுள்ளார். மனைவியை இவ்வாறு சங்கடப்படுத்துவது அவரது ஒரு பொழுதுபோக்கு. "நான் எங்கள் சாப்பாட்டு அறையை ஆன்லைன் அழைப்புகளுக்கு பயன்படுதும் போது, கேமராவில் சாப்பாட்டு அறை மேசையை தெரியும். என்னை என் சகாக்கள் முன்னிலையில் சங்கடப்படுத்த இதை ஒரு வாய்ப்பை மாட் பயன்படுத்தினார்." என்று மேலும் காரா தெரிவித்துள்ளார்.

    ஆரம்பத்தில் இந்த விளையாட்டு அவரது வழமையான ஒரு பொழுதுபோக்காகவே ஆரம்பித்தது. காராவின் கணவர் தனது அலமாரியில் இருந்த பொருட்களைப் பயன்படுத்தி விநோதமாக உடையணியத்தொடங்கினார். ஆனால் இது காராவின் அலுவலக நண்பர்களிடையே மிகவும் பிரபலமானதும், வீடியோவில் வித்தியாசமாகத் தோன்றுவதற்கு அவர்களின் நண்பர்கள் அவருக்கு ஆடம்பரமான ஹாலோவீன் ஆடைகளை அனுப்பத் தொடங்கினர்.


    காரா இந்தப் படங்களை லிங்க்ட்இனில் வெளியிடத் தொடங்கினார். இணையத்தில் இந்த விடயம் வைரலாகி இருவரும் பிரபலமாகிவிட்டனர்.
    "எனது சகாக்கள் இதை விரும்புகிறார்கள். அவர் வீடியோ பின்புலத்தில் தோன்றியதுமே, எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இத்தனைக்கும் அவர் வெறுமனே திரையில் தோன்றி தனது வேலையை செய்துகொண்டிருப்பார். அவரது புதுவித உடையலங்காரம், அனைவருக்கும் சிரிப்பைத் தருகிறது.” என்று காரா தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad