• Breaking News

    கொரோனா பரவல் விசாரணைக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்



    கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கு பரவ செய்யப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் போன்ற ஆரம்பகட்ட பல தகவல்களை சீனா மறைத்ததாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகிறது.

     கொரோனா வைரஸ் எப்படி உருவானது மற்றும் எவ்வாறு பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவந்தன.


      வீடியோ கான்பிரஸ் மூலம் உலக சுகாதார அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவுஸ்திரேலியா கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 120 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன
     இதனால் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பாக விரிவான, சுதந்திரமான விசாரணை போதிய ஆதரவு கிடைதுள்ளது.   வைரஸ் தொடர்பான விசாரணைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சீனா பின்னர் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்து ஒப்புக்கொண்டுள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad